வடக்கு லக்கிம்பூர்:
அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மாமியார் மீது ஆசிட் ஊற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு லக்கிம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அந்த பெண் தனது தாய் வீட்டில் இருந்தார். வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது கணவர் அங்கு வந்துள்ளார். தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியார் மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஆசிட் பட்டதால் பலத்த காயமடைந்த இரண்டு பெண்களும் லக்கிம்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜோகிங் அவுட்போஸ்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடிவருகின்றனர்.