இந்தியா

போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்ற ஜே.சி.பி. - கடைசியில் நடந்த டுவிஸ்ட்

வழிமறிக்க முயன்ற காவல்துறையினரின் முயற்சிகளை மீண்டும் மீண்டும் மீறி தப்பி சென்றார்.

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் திருடப்பட்ட ஜே.சி.பி. இயந்திரம் காவல்துறை தடுப்புகள் மற்றும் நான்கு காவல் நிலைய எல்லைகளைக் கடந்து நீடித்த ஒரு சேசிங் சம்பவம் அரங்கேறியது.

ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று கல்லிக்கோட் காவல் நிலைய பகுதியில் ஒரு ஜே.சி.பி. திருடு போனதாக காவல்துறைக்கு முதலில் தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், கல்லிக்கோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு வெவ்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு நீண்ட தேடுதல் வேட்டையை நடத்தின.

மர்ம நபர் அட்டூழிம்:

இதனிடையே காணாமல் போன ஜே.சி.பி. இயந்திரத்தை மர்ம நபர் ஓட்டி செல்வதை காவல் துறையினர் கண்டறிந்தனர். ஜே.சி.பி. இயந்திரங்கள் வேகமாக செல்வதற்காக உருவாக்கப்படவில்லை.

எனினும், அது வாகனத்தை ஓட்டிய சந்தேக நபரை தடுக்கவில்லை. வாகனத்தை நிறுத்தும் முயற்சியில், அதிகாரிகள் வழி நெடுகிலும் பல இடங்களில் தடுப்புகளை அமைத்தனர்.

ஆனாலும் அந்த நபர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அந்த தடைகளை உடைத்துக்கொண்டு, அவரை வழிமறிக்க முயன்ற காவல்துறையினரின் முயற்சிகளை மீண்டும் மீண்டும் மீறி தப்பி சென்றார்.

ஜே.சி.பி. வாகனம் தடுப்புகளை கடந்து அதிவேகமாக செல்லும் காணொளிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கபிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாலியில் அந்த சேசிங் அடைந்தது. அங்கு, சந்தேக நபர் ஒரு விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டுவிட்டு, கால்நடையாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.

தொடரும் விசாரணை:

பின்னர் காவல்துறையினர் கைவிடப்பட்ட வாகனத்தை மீட்டு, சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்தத் திருட்டு எப்படி நடந்தது என்பது குறித்தும், துரத்தலின் போது நடந்த நிகழ்வுகளின் சரியான வரிசைமுறை குறித்தும் விசாரணை நடைபெற்று வருறது.

சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக புருஷோத்தம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நாயக் உறுதிப்படுத்தினார்.