இந்தியா

ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டி 5 பாட்டில் மதுபானத்தை குடித்த 21 வயதான வாலிபர் பலியான சோகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நண்பர்களிடம் ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டி 5 பாட்டில் மதுபானத்தை குடித்த 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

21 வயது ஆன கார்த்திக் என்ற வாலிபர் தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரிடம் மதுவில் தண்ணீர் கலக்காமல் ஐந்து முழு பாட்டில் மதுபானத்தை குடிக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து வெங்கட ரெட்டி, கார்த்திக்கிடம் ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். இதனை தொடர்ந்து 5 பாட்டில் மதுபானத்தை குடித்த கார்த்திக்கின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், அவருக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.

கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 6 பேர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

SCROLL FOR NEXT