மம்தா பானர்ஜி
இந்தியா

சி.ஜே.பி. போராட்டத்தில் கலந்து கொள்ள ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கைது..!

ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் சிஜேபி-யினர் போராட்டம் அறிவித்தனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வதாக அறிவித்தனர்.

ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற மம்தா பானர்ஜி

அதற்காக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் நோக்கி மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, அக்கட்சியின் எம்.பி.க்களுடன் சென்றார். அப்போது மத்திய டெல்லியில் உள்ள சவுத் அவென்யூ அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் பேருந்து நிலையம் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அப்போது "அரசு எங்களை தவறாக வழி நடத்துகிறது. இந்தியா கூட்டணியான நாங்கள் மக்களின் குரலை வலுப்படுத்த தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

பினராயி விஜயன் கைது

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சிபிஎம் எம்.பி. ஜன் பிரிட்டாஸ் உள்ளிட்டோரும் சத்ராசல் ஸ்டேடியன் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.

மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தடைந்தார். ஞனேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும் என இந்தியா கூட்டணியினர் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். அதில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

இந்தியா கூட்டணியினர் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த்-ஐ சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT