இந்தியா

பெங்காலியில் பேசுவதால் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? - மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணி காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கேஷியாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணி காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 90 லட்சம் பேரில் 60 லட்சம் பேர் இந்துக்கள், 30 லட்சம் பேர் முஸ்லிம்கள். பெங்காலி மொழியில் பேசுவதால் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? எங்கள் குடியுரிமையை இடைவிடாமல் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா?

தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பவானிபூரில் எனது வேட்பு மனுவை ரத்து செய்யும் நோக்கில் பா.ஜ.க. 2 பொய் வழக்குகளை தொடர முயன்றது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் முயற்சியால் அது முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.