இந்தியா

ரூ.89 கோடி நிலுவை தொகையை செலுத்தாத சர்க்கரை ஆலைகள்: மகாராஷ்டிரா எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலம் 2025-26 பருவ காலத்தில் சுமார் 99 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்து, மாநிலங்களில் அதிகபட்ச உற்பத்தியை பதிவு செய்தது.

மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையான ரூபாய் 89 கோடிக்கும் அதிகமானதை திருப்பி செலுத்தாவிட்டால், ஆலைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என அம்மாநில சர்க்கரை ஆணையர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் கடந்த 2025-26 பருவ காலத்தில் சுமார் 99 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்து, மாநிலங்கள் இடையே அதிகபட்ச உற்பத்தியை பதிவு செய்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 210 கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

மேலும் மகாராஷ்டிராவின் நாசிக், சத்ரபதி சம்பாஜி நகர், சோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சர்க்கரை ஆலைகளும், ஒவ்வொரு பருவம் தொடங்குவதற்கு முன்பும், தங்களது உரிமங்களை புதுப்பிப்பதற்காக சர்க்கரை ஆணையகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து பெற்ற கரும்புக்கு 14 நாட்களுக்குள் விலையை செலுத்த வேண்டும்.

இதற்கிடையில் 2025-26 பருவ காலத்தில் 14 ஆலைகள் வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நியாயமான விலையை செலுத்தாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கட்டணத்தை செலுத்தாமல் இருந்த 8 கரும்பு ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை சர்க்கரை ஆணையரகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர சர்க்கரை ஆணையர் சஞ்சய் கோல்டே கூறுகையில், நிலுவையில் உள்ள பாக்கி தொகையை செலுத்தாத வரையில், அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கவிருக்கும் பருவத்திற்கான கரும்பு பணிகளை மேற்கொள்ள ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT