இந்தியா

மகாராஷ்டிரா: சிவன் கோயில் உள்ளேயே சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிசிடிவியால் சிக்கிய கொடூரன் கைது!

சம்பவம் அக்கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியை, கட்டுமான தொழிலாளி ஒருவன் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் அக்கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

நேற்று முன்தினம் (அக்.11) புனே அருகே உள்ள நிக்டி யமுனா நகர் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சிறுமி ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கட்டுமான தொழிலாளி, சிறுமிக்கு திருநீறு பூசுவது போல அழைத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

உடனே சிறுமி அழுது கூச்சலிட ஆரம்பிக்க அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்த, நிக்டி போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் விஷால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் தூண் கட்டுமானப் பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

SCROLL FOR NEXT