இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரின் ஹெலிகாப்டர் கார் பார்க்கிங்-இல் தரையிறங்கியதால் பரபரப்பு - வீடியோ

பாரமதி விமான நிலையம் அருகே லியர்ஜெட் 45 விமானத்தில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலேவின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால், புனே மாவட்டம் புரந்தர் பகுதிக்கு நேற்று ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தார்.

அங்கு ஹெலிகாப்டர் தரையிறங்க ஒதுக்கப்பட்ட ஹெலிபேடில் தரையிறங்காமல் அருகில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமானி தவறுதலாக ஹெலிகாப்டரை வேறு இடத்தில் தரையிறக்கிவிட்டார் என அமைச்சர் சகன் புஜ்பால் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என புனே மாவட்ட ஊரக அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, 2026 ஜனவரி 28 அன்று, பாரமதி விமான நிலையம் அருகே லியர்ஜெட் 45 விமானத்தில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT