ஆந்திர பிரதேசம் மாநிலம் மார்காபுரம் ராயபுரம் அருகே டிப்பர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐதராபாத்தில் இருந்து பாமூர் நோக்கி சென்ற பேருந்து, டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
லாரியில் மோதியதும் மளமளவென்று பேருந்து தீப்பற்றி எரிந்தது.
ஒரு சிலர் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து தப்பிய நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.