இந்தியா

'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து விடுதியில் இருந்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

SCROLL FOR NEXT