இந்தியா

காதலே தனிப்பெரும் துணையே.. செக்ரியூட்டி கணவனுக்கு உணவு சமைத்து எடுத்து வந்து ஒன்றாக சாப்பிடும் மனைவி - கியூட் வீடியோ

சில பந்தங்கள் சொர்க்கத்தில் எழுதப்பட்டவை என்று எழுதியிருந்தார்.

உண்மையான காதல் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி இதயங்களை வென்றுள்ளது.

அன்பை வெளிப்படுத்த பெரிய பரிசுகளோ விலையுயர்ந்த அன்பளிப்புகளோ தேவையில்லை, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்று உறுதியளித்தாலே போதும் என்பதை அந்த வீடியோ சொல்கிறது.

வீடியோ

ஞானத் பட் என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், எச்டிஎப்சி வங்கியின் வெளியே இரவுப் பணியில் இருக்கும் பாதுகாப்பு ஊழியரும் அவரது மனைவியும் மூடப்பட்ட வங்கி ஷட்டர்களுக்கு முன்னால் ஒரு சிறிய மேஜையில் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

"அவர்கள் உங்கள் மகிழ்ச்சியில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.. ஆனால் அவர்கள் எப்போதும் துன்பங்களிலும் உடன் இருப்பார்கள்" என்ற வாக்கியம் இந்த வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளது.

சொர்க்கத்தில் எழுதப்பட்டவை

சாலையின் இரைச்சல்களை புறந்தள்ளி, இருவரும் அந்த இரவில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவது அவர்களிடத்தில் இருக்கும் அன்பை உணர்த்தி நிற்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

அதே நேரம் காசு பணம் இருந்தால்தான் காதல் என்ற பொய்யை உடைத்து உண்மையான காதல் இதுபோன்ற எளிய மக்களிடத்தில் தான் நீடித்திருக்கும் என பூரித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வீடியோவைப் பதிவிட்ட ஞானத் பட், தனது தலைப்பில், "உறவுகள் அந்தஸ்து, பணம் மற்றும் தொழில் ஆகியவற்றால் அளவிடப்படும் இந்தக் காலத்தில், இதுபோன்ற தன்னலமற்ற அன்பு அரிதானது.

சமூகத்தின் பார்வையில் அந்த நபரிடம் எதுவும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கைக்கு உண்மையிலேயே தேவைப்படும் தோழமை அவரிடம் உள்ளது. சில பந்தங்கள் சொர்க்கத்தில் எழுதப்பட்டவை" என்று எழுதியிருந்தார்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உண்மையான அன்பு மற்றும் பந்தம் என்பது இதுதான் என்று உணர்ச்சிவசப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

பணம் மற்றும் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், ஒருவருடன் ஒருவர் இருப்பதுதான் உண்மையான சொத்து என்று கூறி, அந்தத் தம்பதியினர் பாராட்டு மழை பொழிகின்றனர்.

SCROLL FOR NEXT