இந்தியா

பெங்களூருக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி எக்ஸ் பதிவு

மைசூருவில் ‘காஸ்மோஸ்’ (COSMOS) கோளரங்கத்தைத் திறந்து வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருக்கு வருகை தர ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

நமஸ்கார கர்நாடகா, நாளை பெங்களூரு மற்றும் மைசூருவுக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதன்படி அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களையும் குறிப்பிட்டுள்ளார்,

பெங்களூருவில் ‘பிரசாந்தி குடீரம்’ (Prashanti Kutiram)-இன் பொன்விழா கொண்டாட்டங்கள்.

பெங்களூருவில் 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தல் மற்றும் அவற்றுக்கான அடிக்கல் நாட்டுதல்.

மைசூருவில் ‘காஸ்மோஸ்’ (COSMOS) கோளரங்கத்தைத் திறந்து வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT