இந்தியா

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் தாக்கல்

தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.

அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 மசோதாக்களையும் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

மக்களவையில் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா-2026 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அடிப்படை அரிசியலமைப்பை தகர்த்து உரிமைகளை பறிக்கும் வகையில் மசோதா என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் ஆதங்கமாக கூறியுள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா என்பதால் 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை; மக்களவையில் தே.ஜ. கூட்டணிக்கு 292, எதிர்க்கட்சிகளுக்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT