இந்தியா

பொது இடங்களில் அசுத்தம்: 5 மாதங்களில் 28,000 பேருக்கு ரூ.2.31 கோடி அபராதம் விதித்த டெல்லி மாநகராட்சி

இதில் நான்கில் ஒரு பங்கு பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது அடங்கும்.

டெல்லி மாநகராட்சி (MCD) 'ஜன் விஸ்வாஸ் சட்டம்' அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஐந்து மாதங்களில் (மே இறுதி முதல் அக்டோபர் 28 வரை)சுமார் 28,000 பேருக்கு , ரூ.2.31 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற அநாகரிகச் செயல்களுக்காக இதில் நான்கில் ஒரு பங்கு அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் , ஜன விஸ்வாஸ் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்கும் மேலான காலத்தில், தில்லி மாநகராட்சி கிட்டத்தட்ட 28,000 பேருக்கு ரூ.2.31 கோடி அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதங்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒன்று, பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுதல் மற்றும் பொது இடங்களைச் சேதப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக இந்த அபராதமானது வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 16,281 சலான்கள் மூலம் ரூ.99.15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் 11,634 சலான்களுக்கான ரூ.1.32 கோடி அபராதத் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆபத்தான நாய்களை சங்கிலி இன்றி உலாவ விடுவதற்கான அபராதம் 50 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டின் எண்ணை சிதைப்பது அல்லது அழிப்பதற்கான அபராதமும் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குப்பை அல்லது அசுத்தமான கழிவுகளை 24 மணி நேரத்திற்கு மேலாக அகற்றாமல் வைத்திருந்ததற்காக 3,180 பேருக்கு ரூ. 3.18 லட்சம் அபராதமானது வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT