இந்தியா

லேண்டிங் கியரில் கோளாறு.. 192 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் புனேவில் அவசர தரையிறக்கம்

லேண்டிங் கியரில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமான கவனித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புனே விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியது.

மகாராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அசாமில் கவுஹாத்திக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்தியேலே லேண்டிங் கியரில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமான கவனித்துள்ளார்.

அவர் உடனடியாக இதுகுறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தரையிறக்கம்

விமானத்தை மீண்டும் புனே விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யபட்டது.

புனே விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மீட்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விமானத்தின் தரையிறங்கும் சக்கரங்களின் நிலையைச் சரிபார்ப்பதற்காக, விமானி விமானத்தை ஓடுபாதைக்கு மேலே தாழ்வாக இயக்கினார்.

இந்தச் சோதனைக்குப் பிறகு, விமானம் புனே விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 192 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று விமானம்

பயணிகளின் தொடர் பயணத்திற்கு வசதியாக, இண்டிகோ நிறுவனம் பெங்களூருவிலிருந்து புனேவிற்கு மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாற்று விமானத்தின் மூலம் பயணிகளை கவஹாத்திக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இண்டிகோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT