இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

கார்கிலிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கன் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

லடாக் பகுதியில் இன்று காலை 6.05 மணிக்கு திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியில் லே நகரில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில், 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதன் எதிரொலி, கார்கிலிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கன் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதைதொடர்ந்து, லடாக் மாநிலம் லே பகுதியில் இன்று காலை 9.54 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது, ரிக்டர் அளவு கோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.