மத்திய இணையமைச்சர் எல். முருகன் ராஜினாமா செய்ததால் காலியான மத்தியப் பிரதேச மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக இருந்த முருகன், கடந்த 13ம் தேதி மத்திய அமைச்சரவை மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த எம்.பி. பதவிக்கு நவ.12ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 2 மற்றும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 5 ஆகும்.
உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்தீப் சிங் பூரியின் தற்போதைய மாநிலங்களவை பதவிக்காலம் வரும் நவம்பர் 25 உடன் முடிவடைகிறது.
இந்நிலையில் காலியான தொகுதிக்கு பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.