இந்தியா

குல்காம் மோதல்: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்.. என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.