இந்தியா

பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது: கார்கே விமர்சனம்

மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

* மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது

* நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.

* நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

* இந்த நாட்டில், அரசியலமைப்பு உயர்ந்தது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது

* காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

* நாடுதான் உயர்ந்தது, பின்னர்தான் கட்சிகள், மதங்கள். அனைவரும் நாட்டிற்காக ஒன்றுபட வேண்டும்.

* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டபோதும், பீகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.