கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்னமாரா அருகே உள்ள பொத்துண்டியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது தாயார் லட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை (வயது 61) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், சுதாகரனின் மனைவி சஜீதாவை கொலை செய்தவர் என்பதும், அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற அவர், ஜாமீனில் வெளிவந்தபோது தான் சுதாகரன் மற்றும் லட்சுமியை கொலை செய்தி ருப்பதும் உறுதியானது.
இதுதொடர்பான வழக்கு பாலக்காடு கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது திட்டமிட்ட பழிவாங்கும் செயலாக கொலைகள் நடந்திருப்பதாக அரசு தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வாரம் நிறைவடைந்தன. அதன்பிறகு செந்தாமரை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட செந்தாமரைக்கு மரண தண்டதை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதனை இறந்த சுதாகரனின் குழந்தை களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொலை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
பிஎன்எஸ் சட்டத்தின் 103(1) மற்றும் 126(2) பிரிவுகளின் கீழ் செந்தாமரா குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. குற்றம் சாட்டபபட்டவர் சமூகத்திற்குப் பிரச்சனையாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று பல்வேறு உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.