ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்
இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனில் நரேந்திரன், அஜித்குமார், கிரிஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் தான் அப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் நீதிபதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர்.