இந்தியா

ஜெமினி ஏஐ-யிடம் கேட்டு பதில்.. போட்டித் தேர்வுக்கு ப்ளூடூத் ஹெட்செட் எடுத்து சென்றவர் கைது

பொதுசேவை ஆணையத்தேர்வு சில நாட்களுக்கு முன்பு நடந்துவந்தது

கேரள அரசு போட்டித் தேர்விற்கு போன் எடுத்துச்சென்று பரீட்சயில் கூகுள் ஜெமினியில் கேட்டு விடை எழுதிய மாணவரையும் அதற்க்கு உதவிய ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் வனத்துறையில் உள்ள பீட் வன அலுவலக பணியிடங்களுக்கான பொதுசேவை ஆணையத்தேர்வு சில நாட்களுக்கு முன்பு நடந்துவந்தது.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த அனிஷ் பாபு என்பவர் தேர்வு எழுதும் போது தேர்வு காவலர் விஜிலன்ஸ் அதிகாரிக்கு சந்தேகம் வந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சோதனை செய்து பார்க்கும்போது அலைபேசி மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் எடுத்து சென்றதாக கண்டறியப்பட்டது. அனிஷ் பாபுவை விசாரிக்கும் போது திருட்டுத்தனமான செயலை செய்ததாகவும் ஒப்புபுக்கொண்டார்.

மேலும் பனவிளை பகுதியை சேர்ந்த அனிஷ் பாபுவின் நண்பரான அருண் என்பவர் தனக்கு வெளியே இருந்து உதவி செய்ததாகவும் இந்த இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.