இந்தியா

குருவாயூர் கோயிலில் வெண்ணெய் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர்

கடந்த 18ம் தேதி கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி வெற்றி பெற்றது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், பின்னர் ஒரு வழியாக சதீசன் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்தது.

தொடர்ந்து, கடந்த 18ம் தேதி கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் துலாபாரத்தில் வெண்ணை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.