இந்தியா

கேரள அரசு பேருந்துகளில் பெண்களின் கட்டணமில்லா பயண சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல்

வயது, மதம், சாதி, பொருளாதார பின்னணி பேதமின்றி அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

கேரள சட்டமன்ற தேர்தல் இந்திரா உத்தரவாதங்கள் வாக்குறுதி:

கேரள மாநிலம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திரா உத்தரவாதங்களில் ஒன்றான, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கான ‘பிரியதர்ஷினி’ இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு புதன்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரியதர்ஷினி திட்டத்தின் பயனாளர்கள்:

இதையடுத்து கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் உறுதியளித்த இந்த திட்டம் வயது, மதம், சாதி, பொருளாதார பின்னணி பேதமின்றி அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளும் இந்த இலவசப் போக்குவரத்து சேவை திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

பிரியதர்ஷினி திட்டம் நடைமுறை:

வரும் ஜூன் 15 முதல் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் சாதாரண பொது சேவைகளில், முதல் 100 நாட்களுக்கு இந்த திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

100 நாட்களுக்கு பிறகு விரைவு மற்றும் அதிவேக போக்குவரத்து சேவைகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த கேரள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 60 கோடி முதல் ஆண்டுக்கு ரூபாய் 800 கோடி வரை மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகை முழுவதுமாக மாநில அரசால் கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகத்திற்கு திருப்பி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.