இந்தியா

சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை- டி.வி. ரிமோட்டை கொடுக்காத கோபத்தில் விபரீத முடிவு

மறுநாள் காலை வரை சிறுவன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கண்டல்லூர் பகுதியை சேர்ந்த தம்பதி தங்கச்சன்-சிந்து. இவர்களது மகன் ஆதித்தன் (வயது13), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த சிறுவன், டி.வி.யை ஆன் செய்வதற்காக ரிமோட்டை கேட்டார். ஆனால் டி. வி. ரிமோட்டை தாய் கொடுக்கவில்லை.

இதனால் தாயிடம் கோபித்துக்கொணடு சிறுவன் ஆதித்தன் தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான். இரவு ஆகியும் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை. கோபத்தில் அறைக்குள் இருப்பான் என்று கருதி குடும்பத்தினர் யாரும் அவனது அறைக்கு செல்லவில்லை. மறுநாள் காலை வரை சிறுவன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுவன் ஆதித்தன் தூக்கில் பிணமாக தொங்கினான். டி.வி. ரிமோட்டை தாய் தராத கோபத்தில் சிறுவன் தூக்குப்போடடு தற்கொலை செய்துகொண்டான்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT