இந்தியா

கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரம் - 16 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு

திருவனந்தபுரத்தில் நாளை தொடங்கி டிசம்பர் 10 அன்று முடிவடையும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கேரளாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் இணையவழி வன்முறையை எதிர்கொள்ளும் வகையில் 'அவல்கொப்பம்' என்ற புதிய முயற்சி நாளை தொடங்கி தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறவுள்ளது.

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் 'ஆரஞ்சு தி வேர்ல்ட்' பிரச்சாரம் நாளை தொடங்கப்படவுள்ளது.

திருவனந்தபுரத்தில் நாளை தொடங்கி டிசம்பர் 10 அன்று முடிவடையும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அமைப்பினர் பங்கேற்க உள்ளனர்.

இந்த பிரசாரமானது, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி தங்களுக்கு தேவையான உதவிகளை நாடவும், குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் தொடங்கவுள்ளது.

மேலும், குழந்தை திருமணம், வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படவுள்ளன.

இந்த விழிப்புணர்வு பிரசாரம், நவம்பர் 25 அன்று தொடங்கி, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையில் நடைபெறும் வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் பிரசாரத்தில், 'உலகை ஆரஞ்சு நிறமாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நடத்தப்படவுள்ளது.

SCROLL FOR NEXT