கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மலை மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
இதே போல் கொப்பல் மாவட்டம் கங்காவதி பகுதியிலும் கடந்த2 நாட்களாக இடைவிடாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணிளவில் கங்காவதி அடுத்த கொக்கரேகரு என்ற கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.
இதில் அந்த வீட்டில் இருந்த மல்லிகார்ஜூனா (35), அவரது மனைவி நாகவேணி (28). அவர்களது 3 வயது குழந்தை சந்தோஷ் ஆகியோர் மண்ணில் புதைந்து பலியானார்கள்.
இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையின் அங்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர்.