இந்தியா

‘காவிரி விவகாரத்தில் சட்டரீதியாக கர்நாடகாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது’ - டி.கே.சிவகுமார்!

தமிழ்நாடும் ஆற்றின் கீழ் பகுதியில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

காவிரி பிரச்சனை தொடர்பான சட்ட விவகாரத்தில் கர்நாடகா வெற்றிப் பெற்றுள்ளதாகவும், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கும் நீதி கிடைத்துள்ளதாகவும், இனி யாருடனும் மோதலில் ஈடுபடப் போவதில்லை என்றும், அதற்கான அவசியல் இல்லை என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இனி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும், நாட்டின் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார்,

“தற்போது நாங்கள் விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்துள்ளோம். வனப்பகுதிக்கு மாற்றாக வேறு நிலத்தை வழங்க வேண்டியுள்ளது; அதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும் இனி கர்நாடகா எந்த மோதலிலும் ஈடுபடாது என்றும், அதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடும் ஆற்றின் கீழ் பகுதியில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து, மாநிலம் முழுவதும் ஒற்றுமையாக இருப்பதாகவும், பொறாமையின் காரணமாக ஒன்று அல்லது இருவர் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT