இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரதமர் மோடியின் 'பரிசு' - கர்நாடக துணை முதல்வர் விமர்சனம்

4 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்று லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டன.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், 4 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டன.

அதன்படி நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 காசுகளும், டீசல் விலை ரூ.3.11 காசுகளும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரதமர் மோடியின் 'பரிசு' என்று தெரிவித்துள்ளார். நாடு ஒரு மோசமான சூழ்நிலைக்கு வந்துள்ளது. மேலும் ஓராண்டு காலத்துக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதையும் அவர் விமர்சித்துள்ளார்.