காவிரி, மேகதாது நீர்திட்டங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 13 மாநிலம் தழுவிய போராட்டம்  
இந்தியா

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய கடை அடைப்பு

கன்னட ஆதரவு அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நதிநீர் தொடர்பாக, நாளை (ஆகஸ்ட் 13) மாநிலம் தழுவிய முழு கடை அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முழு அடைப்பு

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மஹதாயி மற்றும் கலச பண்டுரி போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கன்னட ஆதரவு அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கர்நாடகா தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

இதன் காரணமாக கர்நாடகாவில் நாளை பள்ளிகள் தொடர்ந்து வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பு காரணமாக, எல்லையோர தமிழ்நாடு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை

முன்னதாக தமிழ்நாட்டிற்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட டி.எம்.சி அளவில் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை உத்தரவிட்டிருந்தது.

ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா அரசு தீவிரமாக செயல்பட வலியுறுத்தியும் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால், முழு அடைப்பு போராட்டத்தில் அமைப்புகள் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.