மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதற்கிடையே, நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமையும் என
சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "பொறுத்திருந்து பார்ப்போம். அதைப்பற்றி இப்போது சொல்வது நன்றாக இருக்காது. தெளிவான நிலவரம் தெரிய இரண்டு நாட்கள் ஆகும், அதுவரை காத்திருப்போம்" என தெரிவித்தார்.