இந்தியா

94% பேர் இந்தியர்களே: மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் பதில்

பாகிஸ்தானிலிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்கள் மீது தாம் ‘பரிதாபம்’ கொள்வதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிவிட்டிருந்த பதிவிற்கு, அபிஜித் டிப்கேவின் பதிவு ஒரு எதிர்வினையாக அமைந்தது

ஒரு வழக்கு விசாரணையின் போது நாட்டின் உள்ள சில இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் அழைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இணையத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ உருவாக்கப்பட்டது.

ஒரு நகைச்சுவையாக தொடங்கப்பட்ட இந்த கட்சி, இணையத்தில் விரைவாக பரவி பெரும் ஆதரவைப் பெற்றது.

மேலும் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியதோடு, அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பாஜக-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தை விட கணிசமான அளவில் அதிகரித்தது.

இருப்பினும், அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே சமீபத்தில், கட்சியின் எக்ஸ் (X) கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் இணையதளத்திற்கும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முன்னதாக அமைச்சர் ரிஜிஜு, பாகிஸ்தானிலிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்கள் மீது தாம் ‘பரிதாபம்’ கொள்வதாக மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனை மறுத்து அபிஜித் டிப்கே, ஒரு தரவை பகிர்ந்துகொண்டார். அதில், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு "ஹேக்" செய்யப்படுவதற்கு முன்பு, அதன் பார்வையாளர்களில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த தரவுகளின்படி, ஏப்ரல் 22 முதல் மே 21 வரை அந்த கணக்கு 1.6 பில்லியன் பார்வைகளையும் 12 மில்லியன் புதிய பின்தொடர்பவர்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.