அரசியலில் பணம் இருப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும் என்ற எழுதாத சட்டம் உள்ளது. ஆனால், சில சமயம் பணமே இல்லாமல் இருக்கும் ஒருவர் போட்டியிடும் வாய்ப்பு பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிய சம்பவங்களும் நடந்துள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில் பெண் ஒருவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆஸ்கிராம் தொகுதியை சேர்ந்தவர் கலிதா மஜ்ஹி. இவர் நிதி நெருக்கடி காரணமாக கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு உதவியாக இருந்துள்ளார். இவரது கணவர் பிளம்பர். இவர்களுக்கு பார்த் என்ற மகன் உள்ளான். இவன் தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவன் சிறு வயதில் இருந்து வளர வளர வீட்டில் வறுமையில் வளர்ந்துள்ளது.
வீட்டின் சுமையுடன் அரசியலில் கால் பதித்துள்ளார். பூத் லெவலில் இருந்து தனது அரசியல் பணியை தொடங்கியுள்ளார். இவர் சிறப்பான பணியை பார்த்து பாஜக 2021 வாய்ப்பு வழங்கியது. 41 சதவீதம் வாக்குகள் பெற்ற போதிலும் தோல்வியை சந்தித்தார். அவர் மீது நம்பிக்கை வைத்து பாஜக மேலிடம் தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கியது. இதில் 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார்.
இவர் வேட்புமனு தாக்கலின்போது, வங்கி டெபாசிஸ்ட், எல்ஐசி பாலிசி உள்பட தன்னிடம் 1.61 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.