நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள். ராஜினாமா செய்யுங்கள்.
நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் துணையாக நிற்கிறேன்!
நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!
நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!
நான் ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன்!
சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்..
தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்..
நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்..
அழுத்தத்தை உடைத்ததற்கு நன்றி.. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சிஜேபி
ஜெய் ஹிந்த்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.