இந்தியா

குருகிராம் மருத்துவமனையில் வாங்சுக்கை சந்தித்தனர் நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேடான்டா மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனைக்கு வாங்சுக் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்தனர்," என்று ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

தீவிர சிகிச்சை:

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் வாங்சுக் மேடான்டா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் உள் மருத்துவ நிபுணரான டாக்டர் சுஷீலா கட்டாரியாவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேடான்டா மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று (ஜூலை 21) மாலை அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தனியார் மருத்துவமனை:

டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குருகிராமில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "டெல்லி ஐகோர்ட் உத்தரவுப்படி, சோனம் வாங்சுக், இன்று மாலை 6:40 மணியளவில் மேல் சிகிச்சைக்காக மேதந்தா மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது மருத்துவ ஆவணங்கள், பரிசோதனை விவரங்கள், சிகிச்சை ஆவணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது," என கூறப்பட்டது.