இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலங்களவை தேர்தல்: என்டிஏ ஆதரவுப்பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றி!

இந்தியா கூட்டணியில் 56 உறுப்பினர்கள் இருந்தபோதிலும், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி.

ஜார்க்கண்ட் மாநிலங்களவை தேர்தலில் என்டிஏ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி மற்றும் ஜேஎம்எம் வேட்பாளர் வைத்தியநாத் ராம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜாவைத் தோற்கடித்து சுயேட்சை வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார்.

ஜார்க்கண்டை ஆளும் இந்தியக் கூட்டணியில் 56 எம்எல்ஏக்கள் இருந்தபோதும், 28 வாக்குகளைப் பெற்ற நத்வானி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜா 20 வாக்குகளைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஏ கூட்டணியிடம் 24 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்தநிலையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி தரப்பிலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் இந்த வெற்றி சாத்தியமானதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றநிலையில், சட்டமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 81 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதில் 3 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. அதில் இரண்டு பாஜகவுடையது, ஒன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தது.

இந்தத் தேர்தல் முடிவு, ஜார்க்கண்டில் உள்ள 'இந்தியா' கூட்டணிக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.