இந்தியா

ஜார்க்கண்ட் போராட்டம்: ஆகஸ்ட் 10 வன்முறை தொடர்பாக 300 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த பேரணியால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

ஜார்க்கண்ட் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 20-ஆவது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 'மூவர்ண யாத்திரை' நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சட்டமன்றத்தை நோக்கி ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற பேரணி தொடர்பாக, பெயர் குறிப்பிடப்படாத 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியின்போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் கோரிக்கை:

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) நடத்திய போட்டி தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிரான கைது வாரண்டுகளை நிறைவேற்றுவதற்காக, மாநில குற்ற புலனாய்வு துறையும் பல இடங்களில் சோதனைகளை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC-JSSC சீர்திருத்த குழுவின் பதாகையின் கீழ் நடைபெற்ற போராட்டம் தொடர்ந்தது. ஆட்சேர்ப்பு தேர்வுகளில் அதிக வெளிப்படைத்தன்மை, பல தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் சி.பி.ஐ. அல்லது ஜார்க்கண்டிற்கு வெளியே உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவின் மூலம் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மூவர்ண யாத்திரை:

தங்கள் போராட்டத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் 15 அன்று 'மூவர்ண யாத்திரை' நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், உண்மையான போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என மாநில அரசை அவர்கள் எச்சரித்தனர்.

ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணி தொடர்பாக, பெயர் குறிப்பிடப்படாத 300 பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. இந்த பேரணியால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, தடை உத்தரவுகளை மீறியது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பானது என ராஞ்சி காவல் கண்காணிப்பாளர் பராஸ் ராணா தெரிவித்தார்.