ஹேமந்த் சோரன் 
இந்தியா

வறுமைக்கோட்டு குடும்பங்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்- ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு

இந்த மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாலை மலர்

ராஞ்சி:

ஜார்கண்டில் வறுமைக்கோட்டு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம், மாதந்தோறும் 10 லிட்டருக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும்.  இந்த தொகை, பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த மானிய உதவியை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட ‘மொபைல் ஆப்’பில் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை 1.04 லட்சம் விண்ணப்பங்களில் 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை