81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு வருகிற 13, 20-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜனதா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி ஜார்க்கண்ட்டில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தொகுதி எதுவும் ஒதுக்காததால் அந்த கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. இதில் 7 முதல் 8 தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றிபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் யாதவ் தெரிவித்துள்ளார்.