ஜே.இ.இ
இந்தியாவின் மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்களான ஐஐடிகள், என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் (ஜே.இ.இ) நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
ஜெஇஇ மெயின்
ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவார்கள்.
சிபிஎஸ்இ இந்த தேர்வை நடத்துகிறது. நடப்பாண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே 17 அன்று CBT முறையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
தற்காலிக விடைக் குறிப்பு
இந்நிலையில் இந்த தேர்வுவில் மொத்தம் உள்ள தாள் 1,2-க்கான விடைகள் தற்காலிக விடைக் குறிப்பு மே 25, காலை 10 மணிக்கு jeeadv.ac.in. இணையத்தில் வெளியாக உள்ளது.
விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்வருமாறு,
jeeadv.ac.in. இணையதளத்தில் உள்நுழைந்து உங்கள் லாக்-இன் விவரங்களை சமர்ப்பித்த பின் திறக்கும் பக்கத்தில் ஜேஇஇ அட்வான்ஸ்டு விடைக்குறிப்புக்கான லிங்க் இருக்கும். அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
ஆட்சேபனை
தற்காலிக தாளில் உள்ள விடைகளில் ஆட்சேபனை இருப்பின் அதை தெரிவிக்க மாணவர்களுக்கு ஒரு மட்டுமே அவகாசம்.
அதவாது மே 26 ஆம் தேதிக்குள் உங்கள் ஆட்சேபானைகளை jeeadv.ac.in. தளத்தில் உங்கள் profile பக்கத்தில் அதற்கான நடைமுறையை பின்பற்றி தெரிவிக்கலாம்.
தேர்வு முடிவுகள்
அவை பரிசீலிக்கப்பட்டு இறுதி விடைக் குறிப்பு ஜூன் 1 இல் வெளியாகும். அதே நாளில் முடிவுகளும் வெளியிடப்படும்.
இதில் தேவையான மதிப்பெண் பெற்றால் மேற்கூறிய கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில மாணவர்கள் தகுதி பெறுவர்.