ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் பசோக்லியில் உள்ள கிராமம் மஷ்கா. இந்த கிராமத்தில் சேவா நீர்மின் நிலையம் உள்ளது. இந்த நீர்மின் நிலையம் ரவி ஆற்றின் துணை ஆறான சேவா அற்றில் உள்ளது.
இங்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை (CISF) வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு பணியில் இருந்த அவ்தேஷ் குமார் சிங் என்ற தலைமைக் காவலர், ஏ.கே. 47 துப்பாக்கியுடன் அலுவலக கட்டிடத்திற்குள் சென்றுள்ளார். அங்கிருந்த சக வீரர்களை நோக்கி சரிமரியாக சுட்டுத்தள்ளியுள்ளார்.
இதில் துணை கமாண்டர் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லக்ஸ்மண் சிங், கான்ஸ்டபிள் ரபிக் அகமது மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர இமாச்சல பிரதேசத்தில் உள்ள NHPC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அப்தேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சக வீரர்களை வீரர் ஒருவர் சுட்டுக்கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.