டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது நிகழ்ந்த காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த முதற்கட்ட உண்மை கண்டறியும் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உயர் மட்ட விசாரணைக் குழுவிற்கு (HPEC) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது
கடந்த ஜூலை மாதம் நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது, காவல்துறை தரப்பில் தடியடி, கண்ணீர் புகை மற்றும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கடுமையான அத்துமீறல் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக 149 செய்தித்தாள்களில் டிது தொடர்பாக புகார்கள் எழுந்ததாகவும், ஆன்லைன் வழியாக குறைந்த அளிவிலான புகார்களே கிடைத்தாகவும்,சூர்ய காந்த் தலைமையிலான அமர்விடம் அந்தக் குழு தெரிவித்தது. மேலும், அக்டோபர் 21 அன்று புகார்களைக் கோரி மற்றொரு மேல்முறையீட்டை வெளியிட்டிருந்ததாகவும் அது உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷியையும் உள்ளடக்கிய அமர்வு, போதுமான ஆதாரங்கள் இல்லாததால், குழுவால் தற்போது எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை என்று குறிப்பிட்டது.
ஆரம்பகட்ட உண்மை கண்டறியும் அறிக்கையைச் சமர்ப்பிக்க அக்குழுவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியது. வன்முறை தொடர்பான அனைத்து மனுக்கள், காணொளிகள் மற்றும் புகார்களை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவிற்கு அனுப்பி வைக்குமாறும் நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.