இந்தியா

பயங்கரவாத வழக்கு: காஷ்மீரில் பல இடங்களில் போலீசார் சோதனை

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி ஷபீர் அகமது லோன் இயக்கும் ஒரு பயங்கரவாதக் குழு குறித்து சிஐகே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீரின் 3 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர், ஷோபியான், காந்தர்பால் மாவட்டங்களில் 10 இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சமீபத்தில் சிஐகே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய பயங்கரவாத விசாரணை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுகிறது.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி ஷபீர் அகமது லோன் இயக்கும் ஒரு பயங்கரவாதக் குழு குறித்து சிஐகே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மத்திய காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்திலுள்ள கங்கன் பகுதியைச் சேர்ந்த லோன், தற்போது வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.