ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ரஜெளரி மாவட்டத்தில் பிம்பேர் கலி பகுதியில் அதிகாலை வேளையில் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு முறியடிக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து, “ரஜெளரியின் கம்பீர் முக்லான் பகுதியில் காலை 11:30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து மேற்கொண்ட உளவுத்துறை சார்ந்த கூட்டு நடவடிக்கையில், பயங்கரவாதிகளை நேருக்கு நேராக சந்தித்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் எங்கள் படைகள் விரைவாக செயல்பட்டு, அப்பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்தி இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.