இந்தியா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்த துணை நிலை ஆளுநர்

உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரண்டு அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.

இந்த ஊழியர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுக்காக வேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஷ்கர்-இ-தொய்பாவின் உதவியுடன், அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.