இந்தியா

கடனை திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்ட ஜெயின் துறவி - கர்நாடகாவில் பரபரப்பு

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் மத துறவிகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், கடனைத் திருப்பிக் கேட்டதால் துறவி கொல்லப்பட்டது தெரிய வந்தது.

பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள நந்த் பர்வத் மடம் எனும் சமண மடத்தில் ஆசார்யா கம்குமார நந்த் மகாராஜ் எனும் சமண துறவி தங்கியிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக மடத்தின் மேலாளர் பீமப்பா உகாரே போலீசாரிடம் புகாரளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயின் துறவி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரது சடலம் ராய்பாக் தாலுகாவின் கடக்பாவி கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் கடனை திருப்பிக் கேட்டதால் துறவி கொல்லப்பட்டது தெரிய வந்தது.

துறவியுடன் இருந்த சந்தேகத்திற்கு இடமான நபர் காவலில் எடுக்கப்பட்டு விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு உதவிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.