திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் ஆகிறது. நேற்று மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2-ல் உள்ள 31 அறைகளிலும், நாராயணகிரியில் உள்ள 9 அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
காத்திருப்பு அறைகளை தாண்டி சிலத்தோரணம் வட்டத்திலிருந்து பாட்டா கங்கம்மா கோவில் வட்டம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று திருப்பதியில் 75,428 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் இன்று அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.