கேரளா பொதுச் சேவை ஆணையத்தின் (PSC) தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, முன்னாள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை அனுப்பிய விவகாரம் பெரும் அரசியலமைப்பு ரீதியான விவாதங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கவும், ஆணையத்தைக் கலைக்கவும் பதவி விலகும் ஆளுநர் பரிந்துரைத்ததாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள், கடுமையான அரசியலமைப்புச் சட்டக் கவலைகளை எழுப்புவதாக கேரளத்தின் முன்னாள் முதல்வர் பினராய விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
சட்டப்பிரிவு 317-ன் படி, முறைகேடு புகார்களின் பேரில் பி.எஸ்.சி தலைவரை நீக்க வேண்டுமானால், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, அவர் நீக்கப்பட வேண்டியவர் தான் என்று அறிக்கை அளித்த பிறகு மட்டுமே குடியரசுத் தலைவரால் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.
இந்த நடைமுறைகளைத் தவிர்த்து ஆளுநர் நேரடியாகப் பரிந்துரை செய்திருப்பது, பி.எஸ்.சி போன்ற ஒரு தன்னாட்சி பெற்ற அரசியலமைப்பு அமைப்பின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல் என்றும், இது அரசியலமைப்பு வரம்புகளை மீறிய செயல் என்றும் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும், பா.ஜ.க-வின் அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர் மாளிகை பயன்படுத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள அவர் தற்போதைய கேரளா அரசு (UDF) இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.