இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை அவரது துணிச்சலுக்காக கௌரவிக்க உள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்.,
“மிச்சார் உண்மையிலேயே ஒரு மாபெரும் நாயகன். மேலும், இந்தப் போரில் இந்தியாவும், இஸ்ரேலும் சிறந்த கூட்டாளிகள். நெருக்கடியான காலங்களில் இஸ்ரேலுடன் இருப்பவர்களை இஸ்ரேல் மறக்காது. அவரை கௌரவிப்பதற்கான ஒரு வழியை நாங்கள் காண்போம்.” என தெரிவித்தார்.
நேற்று அதிகாலை துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், துணை விமானி திடீரென தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்த முயன்றபோது, பலத்த காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் சாதுரியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்த விமானத்தில் அதிகளவில் இருந்தோர் இஸ்ரேலியர்கள் ஆவர். இதனால் இஸ்ரேல் அரசு இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மிச்சாரை பாராட்டி வருகிறது. இந்தியாவும் அவரை நினைத்து பெருமிதம் அடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தூதரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.