இந்தியா

இஸ்லாமாபாத் பயங்கரவாத தாக்குதல் - இந்தியா கடும் கண்டனம்

இந்தியா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.பயங்கரவாதத்தின் கொடூரமான முகத்தை இது காட்டுவதாகவும் இந்தியா கருத்து.

பாகிஸ்தான் - இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை புறக்கணித்தும் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், இத்தாக்குதலுக்கு இந்தியா மீது பழிபோடுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பதிலடி கெடுத்துள்ளது.

மேலும், தாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்குத் இரங்கல் தெரிவிப்பதாகவும், பயங்கரவாதத்தின் கொடூரமான முகத்தை இது காட்டுவதாகவும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT